24 வருடங்களுக்கு பிறகு ஆர்.மாதவனுடன் ஷாலினி - 'அலைபாயுதே 2' வருமா?

2 months ago 15

சென்னை,

விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாலினி. இதுதான் ஷாலினி தமிழில் அறிமுகமான முதல் படம். இந்த படம் வெற்றி பெற்றதால் வாய்ப்புகள் குவிந்தன. அஜித்குமார் ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் நடித்த அலைபாயுதே இன்னொரு திருப்பு முனை படமாக அமைந்தது. கண்ணுக்குள் நிலவு. பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில், 'அலைபாயுதே' நடிகர் ஆர்.மாதவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக 'அலைபாயுதே 2' படத்திற்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

அதன்படி, ரசிகர்கள், "அலைபாயுதே ' நட்சத்திர பெற்றோரின் புகைப்படம். "கார்த்திக் மற்றும் சக்தி". கார்த்திக் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சக்தியை சந்திக்கும்போது. "அலைபாயுதே' வைப் மீண்டும் வந்துவிட்டது... உங்கள் இருவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளனர். சிலர் 'அலைபாயுதே 2' வருமா? என்றும் பதிவிட்டுள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான படம் 'அலைபாயுதே'. இப்படத்தில் ஷாலினி மற்றும் ஆர்.மாதவன், கார்த்திக் மற்றும் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத காதல் படமாக அமைந்தது.

தற்போது ஷாலினி சினிமாவில் நடிக்காதநிலையில், ஆர். மாதவன் கடைசியாக இந்தியில் வெளியான சைத்தான் படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுடன் நடித்திருந்தார்.

Read Entire Article