24-ம் தேதி வரை மாதாந்திர பயணச்சீட்டு பெறலாம்: மாநகர போக்குவரத்துக் கழகம்

3 months ago 20

சென்னை,

மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர பேருந்துகளில் நேற்று (16-ம் தேதி) முதல் நவம்பர்.15-ம் தேதி வரையில் செல்லதக்க, விருப்பம்போல் பயணம் செய்யக் கூடிய ரூ.1,000 மதிப்பிலான (TAYPT) பயண அட்டை மாதந்தோறும் 7 முதல் 22-ம் தேதி வரையிலும், மாதாந்திர சலுகை பயண அட்டை (MST) மாதந்தோறும் 1 முதல் 22-ம் தேதி வரையிலும், அக்டோபர்11 முதல் நவம்பர் 10-ம் தேதி வரை செல்லதக்க 50 சதவீதம் மாணவர் சலுகை பயண அட்டை (SCT) மாதந்தோறும் 1 முதல் 13-ம் தேதி வரை அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், அக்டோபர் 11 முதல் 15-ம் தேதி வரை பயணச்சீட்டுகள் விற்பனை செய்யக்கூடிய நாட்களில் ஆயுதபூஜை மற்றும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த காரணத்தால் மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பயண அட்டைகளும் வருகிற 24-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article