சென்னை,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.