சென்னை: 234 தொகுதியிலும் வெல்வோம் என கூறிக்கொண்டிருக்கும் திமுகவினரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. தமிழகத்தில் ஏறக்குறையை 14 ஆயிரம் தற்காலிக செவிலியர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. விடுப்பு கிடையாது. நிரந்தர செவிலியர்களின் ஊதியத்தில் பாதிதான் அவர்கள் வாங்குகிறார்கள். தற்காலிக செவிலியர்களின் பணியிடங்களை இன்னும் நிரந்தரமாக்கவில்லை.