
ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் தாயகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் வருகின்ற 20.04.2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறும். மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு கூட்டம் 20 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில மாவட்டக் கழகங்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றிய செய்திகள் ஏடுகளில் வந்துள்ளன. கழகத்தின் கட்டுப்பாட்டிற்கு எதிராக இத்தகைய கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.