2030க்குள் அனைவருக்கும் வீடு என்பதே முதல்வரின் தொலை நோக்குத் திட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உரை

4 hours ago 3

சென்னை: 2030-ஆம் ஆண்டுக்குள் “அனைவருக்கும் வீடு” என்பதே முதல்வர் அவர்களின்தொலை நோக்குத் திட்டம் ஆகும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 2025-2026 ஆம் ஆண்டு வீட்டு வசதி துறை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மானிய கோரிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உரையாற்றினார். அப்போது; “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்ற அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்து, இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய 70 க்கும் மேற்பட்ட துறைகளையும், வாரியங்களையும் உருவாக்கி, தமிழ்நாட்டிற்கு என தனி அடையாளத்தையும், கட்டமைப்பையும் ஏற்படுத்தி கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் கலைஞர். முதல்வர் அவர்கள் திடீர் என்று வந்த தலைவர் அல்ல தனது உழைப்பால். திறமையால், தியாகத்தால், தானாக உயர்ந்து உருவான தலைவர். 72 – வயதில் 58 ஆண்டு பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.

கலைஞர் மறைவுக்குப் பின் இனி இந்த இயக்கத்தை வழி நடத்த ஆள் இல்லை என்று சொன்ன எதிரிகள் எல்லோரும் . வியக்கும் வகையில் கழகத்தைக் கட்டி காத்து கட்சியையும் – ஆட்சியையும் கட்டுக்கோப்புடன் – கம்பீரத்தோடு வழி நடத்தி வருபவர் தான் நமது முதல்வர். திமுக தலைவராக பொறுப்பேற்று சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற செய்தவர் 2019, 2024 MP தேர்தலில் 40 க்கு 40 வெற்றி பெற்று, இந்தியாவில் உள்ள மற்ற தலைவர்கள்எல்லாம் வியந்து பார்க்கக்கூடிய தலைவராக நம் முதல்வர் இருக்கிறார்.

கலைஞரின் மறு உருவாக இருக்கிற நம்முடைய முதல்வர் கலைஞரைப் போலவே இந்தியாவிற்கே வழி காட்டக்கூடிய மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம் – தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 கலைஞர் கைவினைத் திட்டம் தாயுமானவர் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்ற பல புதிய திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தில் ஒரு சமுதாய மாற்றத்தையும் சமூக சீர்த்திருத்தத்தையும் ஏற்படுத்திய தலைவர் தான் நமது முதல்வர். கலைஞர் கொண்டு வந்த முத்தான திட்டங்களில் ஒன்று தான்தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்,

அதன் நோக்கம், சென்னை நகரின் நதிக்கரை ஓரங்களிலும், மீனவர் குப்பங்களிலும், எந்த வித அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்ற சூழ்நிலையில், குடிசைகளில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களின்சமூக-பொருளாதார நிலையினை மேம்படுத்தவும், தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நகரங்களை உருவாக்க வேண்டுமென்ற உன்னத நோக்கில், இந்தியாவிலேயே முதன் முதலாக 1970-ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட அற்புத திட்டங்களில் ஒன்று தான் “தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்”.

வாரியத்தின் பெயர் மாற்றம்
தமிழ்நாட்டின் நகர்ப்புற குடிசைப் பகுதிகள் படிப்படியாக அகற்றப்பட்டு 2 லட்சத்து 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டு ஏழை எளிய மக்களின் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும், மேம்படுத்திய நிலையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் வாரியத்தின் பெயரை “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என பெயர் மாற்றி அமைத்தார்.

வாரிய பராமரிப்பில் திட்டபகுதிகள்
கலைஞரால் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தனது சேவையினை துவக்கிய வாரியம்,தற்போது, சென்னை மாவட்டத்தில் 213 திட்டப் பகுதிகளில்1 இலட்சத்து 34 ஆயிரத்து 434 அடுக்குமாடி குடியிருப்புகளும் இதர மாவட்டங்களில் 254 திட்டப் பகுதிகளில்,90 ஆயிரத்து 566 அடுக்குமாடி குடியிருப்புகளும், ஆக மொத்தம் – 467 திட்டப் பகுதிகளில். 2 இலட்சத்து 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாரியம் பராமரித்து வருகிறது. என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் வீடு திட்டம்
2030-ஆம் ஆண்டுக்குள் “அனைவருக்கும் வீடு” என்பதே முதல்வர் அவர்களின்தொலை நோக்குத் திட்டம் ஆகும். 2014 -ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நகர் பகுதிகளில் 9 இலட்சத்து 53 ஆயிரம் குடியிருப்புகள் தேவை என கணக்கிடப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்- AHP
இதில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 41 ஆயிரத்து 518 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு, 74 ஆயிரத்து 597 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 66 ஆயிரத்து 921 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் BLC
பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ்4 லட்சத்து 4 ஆயிரத்து 58 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு, 3 லட்சத்து 36 ஆயிரத்து 552 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 67 ஆயிரத்து 506 வீடுகள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டங்களின் கீழ் 1 இலட்சத்து 36 ஆயிரத்து 187 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் (BLC) அ.தி.மு.க – தி.மு.க
பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அ.தி.மு.க ஆட்சியில், 6 ஆண்டு காலத்தில் 1 இலட்சத்து 40 ஆயிரத்து 250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 4 ஆண்டு கழக ஆட்சியில் 1 இலட்சத்து 96 ஆயிரத்து 302 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

BLC மானியம் உயர்வு
பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ்இதுவரை ஒன்றிய அரசு ஒரு வீட்டிற்குரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும், மாநில அரசு ரூ. 60 ஆயிரமும் என மொத்தம் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிதி ஏழை எளிய மக்களுக்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தாய் உள்ளத்தோடு பரிசீலித்து,நடப்பாண்டு முதல், மாநில அரசின் மானியத்தை ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தி,ஒரு வீட்டிற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுக்குமாடி குடியிருப்புகள் (AHP) அ.தி.மு.க – தி.மு.க
அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில், 2014- 2021 வரை 6 ஆண்டு காலத்தில் ரூ. 2 ஆயிரத்து 438 கோடி மதிப்பில் 27 ஆயிரத்து 668 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டது. 4 ஆண்டு கழக ஆட்சியில் ரூ. 5 ஆயிரத்து 343 கோடியே 16 லட்சம் மதிப்பில் 46 ஆயிரத்து 929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்பட்டுள்ளது.

தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள்
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள 74 ஆயிரத்து 597 அடுக்குமாடி குடியிருப்புகளில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில், 6 ஆயிரத்து 417 குடியிருப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில்,கழக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 56 ஆயிரத்து 299 அடுக்குமாடி குடியிருப்புகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதல்வர் அவர்களால்திறந்து வைக்கப்பட உள்ள குடியிருப்புகள்
தற்போது, ரூ.704 கோடியே 62 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ­­­­­6 ஆயிரத்து 58 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரிரு மாதங்களில் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயனாளிகள் பங்களிப்புத் தொகை குறைப்பு
ஏழை எளிய மக்களுக்காக வாரியத்தால் கட்டப்படும் மறுகட்டுமான குடியிருப்புகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகை ஒரு வீட்டிற்கு ரூ. 4 முதல் 5 லட்சமாக இருந்ததை முதல்வர், திட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் என அடிப்படை வசதிகளுக்கான செலவினங்களை இனி அரசே ஏற்கும் என அறிவித்து, பயனாளிகள் பங்களிப்புத் தொகையை ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரமாக குறைத்து உத்தரவிட்டார். இந்த தொகையையும் ஓரே தவணையில் செலுத்தாமல் மாத தவணையாக செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குறைக்கப்பட்ட பயனாளிகள் பங்களிப்புத் தொகைக்கு வழங்கப்பட்ட நிதி
பயனாளிகளின் பங்களிப்புத் தொகை குறைத்ததினால், கடந்த 4 ஆண்டு காலத்தில், 23 ஆயிரத்து 975 குடும்பங்கள் செலுத்த வேண்டிய பயனாளிகள் பங்களிப்புத் தொகையில் ரூ. 552 கோடியே 18 லட்சம் அரசே வழங்கியுள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணைத் தொகை வழங்குதல்
மறுகட்டுமானம் செய்யப்படும்திட்டப் பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு வீடுகளை காலி செய்ய வழங்கப்படும் கருணைத் தொகை கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரூ. 8 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த கருணைத் தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளர். இது வரை 11 ஆயிரத்து 254 குடும்பங்களுக்கு ரூ.26 கோடியே 74 லட்சத்து 80 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

சிதலமடைந்த குடியிருப்புகளின் எண்ணிக்கை
கழக அரசு பொறுப்பேற்ற உடன்சென்னையில் 40-50 ஆண்டுகளுக்கு முன்பு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் தட்பவெட்ப சூழ்நிலை, நீண்ட நாள் பயன்பாட்டால், சிதிலம் அடைந்து மக்கள் வாழ தகுதி இல்லாத நிலையில், கட்டிடங்களின் உறுதித் தன்மையை வல்லுநர் குழுக்கள் கொண்டு ஆய்வு செய்ததில், தற்போது வரை சென்னையில் 35 ஆயிரத்து 631 குடியிருப்புகளும், இதர மாவட்டகளில் 3 ஆயிரத்து 229 குடியிருப்புகளும், ஆக மொத்தம் 38 ஆயிரத்து 860 குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

சிதிலம் அடைந்த குடியிருப்புகளின் மறுகட்டுமானம்
கடந்த 4 ஆண்டுகளில் சிதிலம் அடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு, ரூ.3 ஆயிரத்து 128 கோடியே 16 லட்சம் மதிப்பில், 18 ஆயிரத்து 360 புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, 49 திட்டப் பகுதிகளில் 12 ஆயிரத்து 869 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, ரூ. 2,719 கோடியே 80 லட்சம் மதிப்பில் 16 ஆயிரத்து 282 குடியிருப்புகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள 2 ஆயிரத்து 78 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. நடப்பாண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ரூ. 1,051 கோடி நிதி ஒதுக்கப்படுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் புனரமைப்பு – புதுப்பொலிவு
வாரியத்தால் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பழுதடைந்த குடியிருப்புகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ.152 கோடியே 57 லட்சம் மதிப்பில் 51 ஆயிரம் குடியிருப்புகள் புனரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, இதுவரை 30 ஆயிரத்து 387 குடியிருப்புகள் பழுதுபார்த்து, புனரமைப்பு செய்து, புதுப்பொலிவு பெற்றுள்ளன. 20 ஆயிரத்து 613 குடியிருப்புகளில் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.

அயோத்திதாசர் பண்டிதர் மேம்பாட்டு திட்டம்
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2023- 2024, 2024-2025 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட ரூ. 100 கோடி நிதியில் 36 திட்டப் பகுதிகளில் உள்ள 14 ஆயிரத்து 494 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி,அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடைகள்,சாலை, மின்விளக்கு, மழைநீர் வடிகால் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 28 திட்டப் பகுதிகளில் உள்ள 43 ஆயிரத்து 396 குடியிருப்புகளுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு இந்த திட்டத்திற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நதிகள் சீரமைப்பில் CRRT திட்டத்தில் வீடுகள் வழங்குதல்
சென்னையில் உள்ள அடையாறு, கூவம் ஆற்றங்கரைகளில் வசித்த ஏழை குடும்பங்களுக்கு CRRT திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் கட்டித் தர திட்டமிடப்பட்டது. அதன்படி, 23 ஆயிரத்து 796 ஏழை குடும்பங்கள் மறுகுடிமயர்வு செய்ய கணக்கெடுக்கப்பட்டது. இதில், 18 ஆயிரத்து 727 குடும்பங்கள் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கூடப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள, 5,069 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் உள்ளது.

மறுகுடியமர்வு செய்யப்பட்ட இடங்களில் வளர்ச்சிப் பணிகள்
பெரும்பாக்கம், துரைப்பாக்கம், கண்ணகிநகர், நாவலூர், அத்திப்பட்டு திட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களது அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய, ரூ.18 கோடியே 5 லட்சம் செலவில் குடிநீர் வசதி- பள்ளி வகுப்பறைகள் சாலைகள் – பூங்காக்கள் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும், ரூ.133 கோடியே 51 லட்சம் மதிப்பில் விளையாட்டு மைதானம், நவீன நூலகம், சமுதாய நல கூடங்கள், திறன் பயிற்சி மையம், பொது பயன்பாட்டு மையம், பூங்காக்கள், சாலைகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தொழில் முனைவோர் பயிற்சி CSR – கல்வி உதவித் தொகை
பெரும்பாக்கம் – செம்மஞ்சேரி -கண்ணகி நகர் ஆகிய திட்டப்பகுதிகளில் உள்ள 42 ஆயிரத்து 985 நபர்களுக்கு மகளிர் நலம், வாழ்வாதார மேம்பாடு, சுகாதாரம், போதை தடுப்பு போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 29 ஆயிரத்து 99 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், ஆயிரத்து 893 இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், அனைத்து திட்டப்பகுதிகளிலும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், தொழில்முனைவோர் பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்படும். 875 மாணவ – மாணவியர்களுக்கு CSR நிதியினை பெற்று உயர்கல்வி பயில உதவித் தொகையாக ரூ.1 கோடியே 99 லட்சத்து 19 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

வாரியத்தில் புதிய பணியாளர்கள் நியமனம்
கடந்த ஆட்சி காலத்தில் வாரியத்திற்கு போதிய பணியாளர்கள் நியமிக்காததால், வாரிய பணிகளில் ஏற்பட்ட தொய்வினை சரி செய்யவும்,அரசின் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தவும், வாரியத்திற்கு வருவாயை பெருக்கவும், திமுக அரசு பொறுப்போற்ற பின் T.N.P.S.C யின் மூலம் 63 உதவிப் பொறியாளர், 11 சமூதாய அலுவலர், 87 இளநிலை உதவியாளர், 117 பண வசூலாளர், 7 சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் என மொத்தம் 286 பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டு வாரிய வளர்ச்சிப் பணிகள் வேகப் படுத்தப்பட்டுள்ளது.

சட்ட மன்ற உறுப்பினர் தாயகம் கவி, அரவிந்த் ராமேஷ், காரப்பாக்கம் கணபதி ஆகியோர் ஏழை – எளிய மக்களுக்கு மனைகளாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு கிரையப்பத்திரம் வழங்க வேண்டும் என பேசினார்கள். அரசாணை 804 பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும், கிரையப்பத்திரங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சைகைன் குறித்து துணை முதலமைச்சர் தலைமையில் செயலாக்கக் குழு அமைக்கப்பட்டு மூன்று, நான்கு முறை இதுகுறித்த கூட்டங்கள் நடத்தி ஆலோசிக்கப்பட்டுள்ளன விரைவில் இதற்கு ஒது தீர்வு காணப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முதல்வரின் வழிக்காட்டுதலின்படி தமிழ்நாட்டின் நகர்ப்புற பகுதிகளை குடிசைகள் அற்ற நகரங்களாக புதுப் பொலிவோடு மாற்றுவதுடன், வாரியத்தின் சார்பில் கட்டி வழங்கப்படும் வீடுகள் 50 ஆண்டுகளுக்கு மேல் உறுதி தன்மையோடு இருக்கும் வகையில் கட்டப்பட்டு, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தனது பணியினை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூறினார்.

The post 2030க்குள் அனைவருக்கும் வீடு என்பதே முதல்வரின் தொலை நோக்குத் திட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உரை appeared first on Dinakaran.

Read Entire Article