நாமக்கல்: கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாடில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
நாமக்கல்லில் தேமுதிக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம். கட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம்.