2026 சட்டமன்ற தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம் - அமைச்சர் பொன்முடி பேச்சால் பரபரப்பு

3 months ago 20

விழுப்புரம்,

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி பாக முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:-

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நம்முடைய கூட்டணி வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும். அதுதான் தி.மு.க. அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும். நமக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் இருந்தாலும் அதை தூக்கியெறிந்துவிட்டு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.

பிரசார பீரங்கிகளான நீங்கள், தேர்தலில் யார் நம்மை எதிர்த்து நின்றாலும் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டும் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்ற உணர்வை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வருகிற தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம். ஆனால் நம்முடைய கட்சி சார்பிலும், தோழமை கட்சிகள் சார்பிலும் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க இப்போதே கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article