2026 சட்டப்பேரவைதேர்­தல் என்ற போட்டிக்கு இப்போதே நாம் பயிற்­சி­யை தொடங்க வேண்­டும்: கிரிக்கெட் போட்டி, தேர்தலை ஒப்பிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

3 months ago 7

சென்னை: திமுக தலைவர், முத­ல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்­னிட்டு, திமுக விளை­யாட்டு மேம்­பாட்டு அணி சார்­பில், திமுக அணி­கள் உட்­பட 20 அணி­கள் பங்­கேற்­கும் `மாபெ­ரும் கிரிக்­கெட் போட்டி’ சென்­னை­யில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெற்­றிக்­கோப்பை மற்­றும் ஜெர்சிக்களை துணை முத­ல்வர் உத­ய­நிதி ஸ்டாலின், அறி­மு­கப்­ப­டுத்தி வாழ்த்­திப் பேசி­யதாவது: 2026ம் ஆண்டு சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் தயா­நிதி மாறன் சொன்­ன­தைப்­போல், இந்த `டோர­ன­மென்ட்’ நமக்கு மிக­மிக முக்கியமான டோர­ன­மென்ட் இதை­விட மிக­மிக முக்­கி­ய­மான டோர­ன­மென்ட் என்­றால், அது 2026ம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­தல் டோர­ன­மென்ட்­தான்.

நமக்கு எதிரே நிறைய அணி­கள் இருக்­க­லாம். புதி­தாக அணி­கள் உரு­வா­க­லாம். ஆனால், வெற்­றி­பெற்று, கப் (கோப்பை) அடிக்­கப்­போ­வது நம் தலை­வர் தலைமையிலான தி.மு.க தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி அணி என்­பதை நீங்­கள் உறு­தி­செய்ய வேண்­டும்.ஏனென்­றால், தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு என்­றைக்­கும் மன­துக்­குப் பிடித்த நெருக்­க­மான அணி என்­றால், அது நம் தலை­வர் தலை­மை­யி­லான திமுக அணி­தான்.

ஒரு போட்டி என்­றால், அதற்கான முன்­த­யா­ரிப்பு, பயிற்­சி­கள், உடற்­ப­யிற்­சி­கள் இதெல்­லாம் மிக­மிக முக்­கி­யம். அவை இருந்­தால்­தான் நாம் வெற்றி பெற முடி­யும். ஆகவே, இந்­தப் போட்­டிக்கு மட்­டு­மல்ல, வரப்­போ­கின்ற 2026 சட்­ட­மன்­றத் தேர்­தல் என்ற மிகப்­பெ­ரிய போட்­டிக்­கும் இப்­போ­தி­லி­ருந்தே அந்­தப் பயிற்­சி­க­ளை­யும், வாம்­­அப்­பை­யும் நாம் தொடங்கியாக வேண்­டும். இவ்­வாறு அவர் பேசினார்.

இதில் திமுக விளை­யாட்டு மேம்­பாட்டு அணிச் செய­லா­ள­ர் தயாநிதிமாறன் எம்பி, அமைச்­சர்­கள் செந்தில்பாலாஜி,, மா.சுப்­ர­ம­ணி­யன், அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணே­சன், சென்னை மாந­கர மேயர் பிரியா மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கிரிக்கெட் போட்டியை டாஸ் போட்டு தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: இந்த போட்டி இன்றும் நடக்கிறது. வெற்றி பெறும் ஆண்கள் அணி (16 அணிகள்) முதல் பரிசு ஒரு லட்சம், இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ரூபாய், மேன் ஆப்தி மேட்ஜ், மேன் ஆப்தி சீரியஸ் என்று அவர்களுக்கு பெரிய பரிசு மழை காத்திருக்கிறது. மகளிர் அணியில் 4 அணிகள் போட்டியிடுகின்றன. முதல் இடத்தை பெறும் அணிக்கு ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் மற்றும் ஸ்கூட்டி என்று பரிசு திருவிழா இருக்கும் என்றார்.

The post 2026 சட்டப்பேரவைதேர்­தல் என்ற போட்டிக்கு இப்போதே நாம் பயிற்­சி­யை தொடங்க வேண்­டும்: கிரிக்கெட் போட்டி, தேர்தலை ஒப்பிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article