2025ல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு பதில்

1 month ago 5

சென்னை: அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. அப்போது, அவையில் எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு எப்போது என அதிமுகவின் செல்லூர் ராஜூ பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு; அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். வீர வசுந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு நடத்த தேவையான 63 பணிகளில் 40 பணிகள் நடைபெற்று வருகின்றன. 25 அடி நீளம் கொண்ட கற்தூண்கள் தேவைப்படுவதால் அதனை எடுக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்க 25 அடிக்கு ஒரே நீளத்தில் கற்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. வெகுவிரைவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கூறினார்.

 

The post 2025ல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.

Read Entire Article