2020 டெல்லி கலவரம் டெல்லி பாஜ அமைச்சர் மீது வழக்கு பதிவு

1 day ago 3

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த வன்முறை சம்பவத்தில் பாஜ தலைவர் கபில் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. ஆனால் டெல்லி காவல் துறை இதற்கு மறுப்பு தெரிவித்தது.

மேலும் மிஸ்ரா வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளதாகவும், கலவரத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தது. இந்நிலையில் விகார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், கூடுதல் தலைமை நீதிபதி வைபவ் சவ்ராசியா, குற்றம்சாட்டப்பட்ட நேரத்தில் மிஸ்ரா அந்த பகுதியில் இருந்தார் என்பது தெளிவாகிறது. இது குறித்து மேலும் விசாரணை தேவை. கபில் மிஸ்ரா மற்றும் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார். கபில் மிஸ்ரா தற்போது டெல்லி கலை, கலாச்சார துறை அமைச்சராக இருக்கிறார்.

The post 2020 டெல்லி கலவரம் டெல்லி பாஜ அமைச்சர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article