200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்லும்: செல்வப்பெருந்தகை உறுதி

2 weeks ago 3

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்குபதிந்து 13 ஆண்டுகள் விசாரணை நடத்திய நிலையில் எந்த குற்றச்சாட்டும் இல்லை. இதனால் வழக்கை முடித்து வைப்பதாக கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்தது. இதை கோர்ட்டும் ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்துவைத்துள்ளது. இதுவே காங்கிரசின் தூய்மையான ஆட்சிக்கு பாஜ கொடுத்திருக்கும் நற்சான்றிதழாகும்.

உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதும் உண்மைக்கு புறம்பான வழக்குகளை பதிவு செய்வதும் பாஜகவுக்கு வாடிக்கையாக உள்ளது. காங்கிரஸ் பேரியக்கம் எப்படிப்பட்ட தூய்மையான ஆட்சியை மன்மோகன் சிங் தலைமையில் கொடுத்திருக்கிறது என்பதற்கு பாஜவும் அமலாக்கத்துறையும் கொடுத்திருக்கும் சாட்சி இதுவாகும். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு கூறினார்.

The post 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெல்லும்: செல்வப்பெருந்தகை உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article