20,000 பால் எடுக்கும் இயந்திரம் வாங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

1 month ago 6

சென்னை: 20,000 பால் எடுக்கும் இயந்திரம் வாங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். கையில் பால் கறந்தால் குறைவாக வருகிறது, அதனால் எனது வீட்டிலேயே சோதனை முறையில் மெஷின் வைத்துள்ளேன். ஒரு பால் கூட்டுறவு சங்கத்துக்கு 2 மெஷின் என்ற அடிப்படையில் 20,000 எந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. பென்னாகரத்தில் பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால் 5,000 லி. கொள்ளளவு கொண்ட பால் குளிரூட்டு நிலையம் அமைக்கப்படும். பால் உற்பத்தியை அதிகரித்து கொடுத்தால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும் என பேரவையில் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

The post 20,000 பால் எடுக்கும் இயந்திரம் வாங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article