பெங்களூரு: கடந்த டிச.30ம் தேதி, தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.அதோடு, 24 ஆய்வு கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனவரி 7, 9 ஆகிய தேதிகளில் கூடுதல் உந்து சக்தி காரணமாக விண்கலன்கள் டாக்கிங் செய்ய முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உந்து சக்தி குறைக்கப்பட்டு, மெல்ல மெல்ல விண்கலன்களுக்கு இடையிலான தூரம் குறைக்கப்பட்டு வருகிறது.டாக்கிங் சோதனையை வெற்றிகரமாக செய்து முடிக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இரண்டு விண்கலன்களுக்கு இடைப்பட்ட தொலைவு 15 மீட்டராக குறைக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டது. சோதனை முயற்சியாக பாதுகாப்பாக மீண்டும் நகர்த்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ)தெரிவித்தது. ஸ்பேடெக்கின் வெற்றிகரமான செயல்விளக்கம், சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புதல் போன்ற அதன் எதிர்கால பணிகளுக்கு முக்கியமான தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற நான்காவது நாடாக இந்தியாவை உருவாக்கும்.
The post 2 விண்கலன் இடையே தூரம் 3மீ. ஆக குறைப்பு: இஸ்ரோ சோதனை வெற்றி appeared first on Dinakaran.