2-வது டெஸ்ட்: தொடரை வெல்லப்போவது யார்..? இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இன்று மோதல்

16 hours ago 4

நார்த்தம்டான்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய 'ஏ' அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நார்த்தம்டானில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த போட்டியில் இரட்டை சதமடித்த கருண் நாயர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் களம் இறங்குகிறார். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலர் இந்த போட்டியில் விளையாட உள்ளதால் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. 

Read Entire Article