
புலவாயோ,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
தென் ஆப்பிரிக்கா: டோனி டி சோர்சி, லெசெகோ செனோக்வானே, வியான் முல்டர் (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் ப்ரெவிஸ், கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), செனுரன் முத்துசாமி, கார்பின் போஷ், பிரனெலன் சுப்ரயன், கோடி யூசுப்.
ஜிம்பாப்வே: டியான் மியர்ஸ், தகுட்ஸ்வானாஷே கைடானோ, நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரெய்க் எர்வின்(கேப்டன்), வெஸ்லி மாதேவெரே, தபட்ஸ்வா சிகா, வெலிங்டன் மசகட்சா, குண்டாய் மாடிகிமு, பிளெஸிங் முசரபானி, தனகா சிவாங்கா.