2 மாதங்களாக ஊதியம் வழங்காததால் கடலூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக்

5 months ago 28

கடலூர்: கடலூர் மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு தூய்மைப் பணிகளை செய்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். இதில்லாமல், 360 பேர் தனியர் நிறுவனமான கிரீன் சிட்டி நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Read Entire Article