2 மகள்களை கொன்று கர்ப்பிணி தற்கொலை

1 month ago 3


வாழப்பாடி: குடும்ப தகராறில் 2 மகள்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நெய்யமலை அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ரவி (35). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் (30). இவர்களுக்கு மனோரஞ்சனி (7), நித்தீஸ்வரி (3) என 2 மகள்கள். தற்போது மாதம்மாள் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். வேலை முடிந்து தினமும் லேட்டாக ரவி வீட்டுக்கு வந்ததால் அவருடன் மாதம்மாள் சண்டை போட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையால் அவர் கோபித்து கொண்டு, 2 குழந்தைகளுடன் தாய் வீட்டிக்கு சென்றார்.

பின்னர் திரும்பி வந்தார். இந்நிலையில் கடந்த 23ம்தேதி மாதம்மாள் 2 குழந்தைகளுடன் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று ரவியின் வீட்டின் அருகே விவசாய கிணற்றில் மாதம்மாள், 2 குழந்தைகளின் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், தன்னிடம் கணவர் ஏதோ உண்மையை மறைக்கிறார் என்று மனமுடைந்து, குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

The post 2 மகள்களை கொன்று கர்ப்பிணி தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article