புதுடெல்லி,
தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாடு லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவுக்கும், ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து இன்று நடைபெற்ற 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, பிரச்சனைகளுக்கு போர்க்களத்தில் இருந்து தீர்வு காண முடியாது என்று வலியுறுத்தினார். மேலும் அவர் இது போரின் சகாப்தம் அல்ல என்றும் கூறினார்.
இந்த நிலையில் ஆசியான்-இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி தனது 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தடைந்தார்.