2 நாட்கள் – தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் “பிரவுனி வகைகள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி”

5 hours ago 3

சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 2 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 30..06.2025 முதல் 01.07.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் பேக்கரி தயாரிப்புகள் கிளாசிக் பிரவுனி, ப்ளாண்டீஸ் டிரிபிள் சாக்லேட் பிரவுனி நட்ஸ் ஓவர்லோடட் பிரவுனி, முட்டை இல்லாத பிரவுனி பழம் மற்றும் கொட்டை பிரவுனி பிரீமிக்ஸிலிருந்து பிரீமிக்ஸ் குறைந்த விலை முட்டை இல்லாத பிரவுனி கிரீம் சீஸ் பிரவுனி வீட்டில் பிரீமிக்ஸ் முட்டை இல்லாத ரெட்வெல்வெட் கிரீம் சீஸ் சுழல் பிரவுனி பிரீமியம் லோட்டஸ் பிஸ்காஃப் பிரவுனி. தினை பிரவுனி ஆரோக்கியமான பேரீச்சம்பழம் சாக்லேட் மற்றும் கலவை இல்லாத பிரவுனி வேர்க்கடலை வெண்ணெய் பிரவுனி பிரவுனி தயாரித்தல் பிரவுனி கனாச் சிம்பிள் சாக்லேட் சாஸ் டப் பிரவுனி டிசைனர் பிரவுனி பேக்கிங் மற்றும் விலை, தயாரிப்பின் லேபிளிங் சந்தைப்படுத்தல் அம்சங்கள் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. 8668102600.
முன்பதிவு அவசியம்:
அரசு சான்றிதழ் வழங்கப்படும்

The post 2 நாட்கள் – தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் “பிரவுனி வகைகள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி” appeared first on Dinakaran.

Read Entire Article