₹2 ஆயிரத்துக்காக டார்ச்சர் ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற புதுமாப்பிள்ளை தற்கொலை

1 month ago 5

திருமலை : ஆந்திராவில் ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற புதுமாப்பிள்ளை, ரூ.2 ஆயிரத்துக்கு டார்ச்சர் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அங்காடி திப்பாவை சேர்ந்தவர் நரேந்திரா(21).

இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நரேந்திரா ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். பின்னர் கடன் தொகை முழுவதும் செலுத்திய நிலையில், இறுதியாக ரூ.2 ஆயிரம் நிலுவையில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் கடன் செயலி ஊழியர்கள் ரூ.2 ஆயிரம் பணத்துக்காக அடிக்கடி போன் செய்தும், நேரில் வந்தும் தொல்லை கொடுத்துள்ளனர்.மேலும் நரேந்திரா மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்ததால் மனமுடைந்த நரேந்திரா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெற்றோர் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.2 ஆயிரத்துக்காக மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ₹2 ஆயிரத்துக்காக டார்ச்சர் ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற புதுமாப்பிள்ளை தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article