199 நாடுகள் பட்டியலில் இந்தியா பாஸ்போர்ட் மதிப்பு 148 ஆக சரிந்தது: நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது அயர்லாந்து

19 hours ago 2

புதுடெல்லி: உலகம் முழுவதும் 199 நாடுகளில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை நோமாட் கேபிடலிஸ்ட் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டது. இதில் நம்பர் 1 இடத்தை அயர்லாந்து பிடித்தது. வழக்கமாக முதல் இடத்தை பிடித்து வந்த சுவிட்சர்லாந்து இந்த முறை இரண்டாவது இடத்தையும், கிரீஸ், போர்ச்சுகல், மால்டா, இத்தாலி, லக்சம்பர்க், பின்லாந்து, நார்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நியூசிலாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

மொத்தம் 199 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 148வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 147வது இடத்தில் இருந்த இந்தியாவின் பாஸ்போர்ட் மதிப்பு இந்த ஆண்டு ஒரு இடம் சரிந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கொமோரோஸுடன் 47.5 புள்ளிகள் பெற்று இந்தியா 148வது இடத்தைப் பகிர்ந்து கொண்டது. தியா, 199 நாடுகளில் 148வது இடத்திற்கு சரிந்துள்ளது.

ஐரோப்பாவின் சான் மரினோவுடன் அமெரிக்கா 45 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டது. பாகிஸ்தான் 195, ஈராக் 196, எரித்திரியா 197, ஏமன் 198 மற்றும் ஆப்கானிஸ்தான் 199 வது இடங்களைப் பிடித்து, பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தன. ஜனவரியில், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 80 வது இடத்தில் இருந்து 85 வது இடத்திற்கு சரிந்தது.

* டாப் 10
1. அயர்லாந்து
2. சுவிட்சர்லாந்து
3. கிரீஸ்
4. போர்ச்சுக்கல்
5. மால்டா
6. இத்தாலி
7. லக்சம்பர்க்
8. பின்லாந்து
9. நார்வே
10 ஐக்கிய அரபு எமிரேட்

The post 199 நாடுகள் பட்டியலில் இந்தியா பாஸ்போர்ட் மதிப்பு 148 ஆக சரிந்தது: நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது அயர்லாந்து appeared first on Dinakaran.

Read Entire Article