மும்பை: மகாராஷ்டிரா, வார்தாவை சேர்ந்த 18 வயதான பெண் 24 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு அந்த பெண்ணை வாலிபர் பலாத்காரம் செய்தார். இதில் அந்த பெண் கர்ப்பமடைந்தார். ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தனர். பிறகு திருமணம் செய்து கொண்டனர். அந்த வாலிபர் தொடர்ந்து அவரை பலாத்காரம் செய்தும் கொடுமைப்படுத்தியும் வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் வாலிபருக்கு செசன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் அவர் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஏ.சனாப், தனது மனைவியுடன் உடல் உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது என்று கூறுவதை ஏற்க முடியாது. 18 வயதுக்கும் குறைவாக இருக்கும் மனைவியுடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் தான். திருமணமானவரோ அல்லது திருமணம் ஆகாதாவராக இருந்தாலும் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணுடன் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரம் தான். எனவே செசன்ஸ் நீதிமன்றம் அளித்துள்ள 10 ஆண்டு சிறை தண்டைனையை உறுதி செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.
The post 18 வயதுக்கும் கீழ் உள்ள மனைவியின் சம்மதம் இல்லாமல் நடக்கும் உடலுறவு பலாத்காரம்: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.