18 மணி நேரத்தில் 2.5 கோடி பார்வைகளை கடந்த 'புஷ்பா 2' படத்தின் 'கிஸ்ஸிக்' பாடல்

7 months ago 20

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீ லீலா நடனமாடியுள்ள இந்த பாடலுக்கு 'கிஸ்ஸிக்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தமிழ் புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் மாபெரும் அளவில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ லீலா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் 'கிஸ்ஸிக்' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டனர். பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார். பாடலை சுப்லாஷினி பாடியுள்ளார்.

படத்தின் முதல் பாடலான 'கிஸ்ஸிக்' பாடல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் தற்பொழுது யூடியூபில் 2.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

#KissikSong breaks the highest viewed South Indian song record of 24 hours in just 18 hours #Kissik Telugu lyrical video hits massive 25 MILLION+ VIEWS in a flash ⚡▶️ https://t.co/29WtUBF9t1An Icon Star @alluarjun & Dancing Queen @sreeleela14 dance treat A… pic.twitter.com/bZ16f6PTsm

— AGS Entertainment (@Ags_production) November 25, 2024
Read Entire Article