18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில்.. முதல் கேப்டனாக வித்தியாசமான சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்

2 hours ago 2

ஜெய்ப்பூர்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 70 ரன்களும், ஷசாங் சிங் 59 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் துஷர் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53 ரன்களும், ஜெய்ஸ்வால் 50 ரன்களும் அடித்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டும், மார்கோ யான்சென், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

12-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் (மழையால் ஒரு ஆட்டம் ரத்து) பெற்ற நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் 2014-ம் ஆண்டுக்கு பின் பஞ்சாப் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.

மேலும் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே டெல்லி அணியை 2 முறையும் (2019 & 2020), கொல்கத்தா அணியை ஒரு முறையும் (2024) பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார்.

Different jerseys, same leadership DNA Will this be the season Shreyas Iyer takes PBKS all the way? #TATAIPL | @PunjabKingsIPL | @ShreyasIyer15 pic.twitter.com/poIirhscGM

— IndianPremierLeague (@IPL) May 19, 2025
Read Entire Article