பெரம்பூர்: 17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த கணவர் மற்றும் இரண்டுபேரின் பெற்றோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்துவரும் 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்துள்ளதாக கிடைத்த தகவல்படி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமிழ்கொடி தலைமையில் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். இதன்பின்னர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து முடித்துள்ள 17 வயது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டது என்று பொய் சொல்லி அவரது பெற்றோர் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த விக்ரம் (23) என்பவருக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் 10ம் தேதி சிறுவாபுரி முருகன் கோயிலில் வைத்து கட்டாய திருமணம் செய்துள்ளனர் எனதெரிந்தது.
இதன்பிறகு உடனடியாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளதால் அவற்றை கலைத்துவிட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மேலும் விசாரணை நடத்திவிட்டு போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறுமியின் கணவர் விக்ரம், இவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
The post 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; கணவர், பெற்றோர் மீது வழக்கு: கருக்கலைத்தது விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.