புதுடெல்லி: ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்ட அறிக்கை: மொத்த பெண் எம்பி, எம்எல்ஏக்களில் 17 பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்கள். மக்களவையில் 75 பெண் எம்பிக்களில் 6 பேரும், மாநிலங்களவையில் 37 பெண் எம்பிக்களில் 3 பேரும், மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் உள்ள 400 பெண் எம்எல்ஏக்களில் 8 பேர் கோடீஸ்வரிகளாக உள்ளனர். இவர்களில் 143 பேர், அதாவது 28 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
மக்களவை பெண் எம்பிக்களில் 24 பேர் மீதும் (32%), மாநிலங்களவை பெண் எம்பிக்களில் 10 பேர் மீதும் (27%), 400 பெண் எம்எல்ஏக்களில் 109 பேர் (27%) மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், 78 பெண் எம்பிக்கள் (15%) மீது கொலை முயற்சி மற்றும் கொலை போன்ற கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. கட்சிகள் அடிப்படையில், அதிக குற்ற வழக்குகள் கொண்ட பெண் எம்பி, எம்எல்ஏக்களில் பாஜ முதலிடம் பிடிக்கிறது. இக்கட்சியின் 217 பெண் எம்பி, எம்எல்ஏக்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
The post 17 பேர் கோடீஸ்வரிகள் 28% பெண் எம்பி, எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்: பாஜ முதலிடம் appeared first on Dinakaran.