₹17,500 இல்லாததால் இடம் மறுப்பு; தலித் மாணவனுக்கு தன்பாத் ஐஐடியில் சீட்: உச்ச நீதிமன்றம் அதிரடி

3 months ago 23

புதுடெல்லி: தன்பாத் ஐஐடியில் ரூ.17,500 கட்டாததால் இடம் மறுக்கப்பட்ட தலித் மாணவனுக்கு சீட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள டிடோரா கிராமத்தில் வசிக்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளியின் மகன் அதுல் குமார்(18). தலித் இளைஞர். ஜேஇஇ தேர்வு எழுதிய அவருக்கு தன்பாத் ஐஐடியில் இடம் கிடைத்தது. ஜூன் 24 மாலை 5 மணிக்குள் அவர் ரூ. 17,500 கட்டணம் கட்ட வேண்டும். ஆனால் குறித்த நேரத்துக்குள் அவரால் பணம் திரட்ட முடியாததால் சீட் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ்மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலித் இளைஞர் அதுல் குமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட்,’மனுதாரரைப் போன்ற திறமையான மாணவரை ஏமாற்றி விடக்கூடாது. அரசியல் சட்டத்தின் 142வது பிரிவைப் பயன்படுத்தி ஐஐடி தன்பாத்தில் பிடெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க வேண்டும். விடுதி சேர்க்கை போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்’ என்ற தலைமை நீதிபதி, இருகரம் கூப்பியபடி நின்ற மாணவர் அதுல்குமாரைப்பார்த்து,’ ஆல் தி பெஸ்ட். நன்றாக படிக்க வேண்டும்’ என்று வாழ்த்தினார்.

The post ₹17,500 இல்லாததால் இடம் மறுப்பு; தலித் மாணவனுக்கு தன்பாத் ஐஐடியில் சீட்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article