150 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

4 months ago 15

மண்டபம்,ஜன.9: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன பயன்பாட்டை ஒழிப்பதற்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மண்டபம் பேரூராட்சி பகுதியில் உணவகங்கள் மற்றும் மளிகை கடைகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமையில் பணியாளர்கள், அலுவலர்கள் சார்பில் அதிரடி சோதனை நேற்று நடைபெற்றது. அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட சுமார் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைக்காரர்களுக்கு அபாரதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் மண்டபம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மகேந்திரன், உணவு பாதுகாப்பு அலுவலர், லிங்கவேல், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

The post 150 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article