15 வருடங்களுக்கு பிறகு சிம்புவோட நடித்தது மகிழ்ச்சி - திரிஷா

19 hours ago 3

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. 'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாடல் வெளியீடு நிகழ்வில் மணி ரத்னம், ஏ.ஆர் ரகுமான், கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் மற்றும் படக்குழு கலந்துக் கொண்டது. திரிஷா 'இந்த படத்தில் நான் நடித்தது கனவு மெய்ப்பட்ட தருணம். மணிரத்னம், கமல் போன்றவர்களுடன் நானும் இணைந்திருப்பது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. சிம்புவும் நானும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற படத்தில் இணைந்து நடித்தோம். இப்போதும் பலர் அந்த படத்தை பற்றிதான் கேட்கிறார்கள். மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்பார்கள். 'தக் லைப்' படம் மூலம் அந்த மேஜிக் நடந்திருக்கிறது' என கூறியுள்ளார்.

When Thugs step in, #Jinguchaa hooks 10 million souls with the Wedding Anthem!#Jinguchaa out now ➡️ https://t.co/J1wOMW6gT5 #Jinguchaa #Thugsweddinganthem#Thuglife #ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTRA #ManiRatnam FilmAn @arrahman MusicalA @ikamalhaasanpic.twitter.com/BN7v4aLDJ0

— Raaj Kamal Films International (@RKFI) April 18, 2025
Read Entire Article