15 இடங்களில் மாட்டு கொட்டகை - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

2 weeks ago 2

சாலைகளில் சுற்றித் திரி​யும் மாடு​களால் ஏற்படும் தொல்​லைகளை தடுக்க மாநக​ராட்சி சார்​பில் 15 இடங்​களில் மாட்டு கொட்டகைகள் கட்டப்​பட்டு வருகிறது. சென்னை மாநகரில் மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரு​வல்​லிக்​கேணி மற்றும் விரிவாக்​கப்​பட்ட பகுதி​களில் மாடுகள் முட்டி காயமடைவது தொடர்​கதையாக இருந்து வருகிறது.

மாநக​ராட்சி நிர்​வாகம் சார்​பில் அவ்வப்​போது பொது​மக்​களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரி​யும் மாடுகளை பிடித்து சென்​றாலும் பிரச்​சினை தீர்ந்​த​பாடில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரு​வல்​லிக்​கேணி​யில் மாடு முட்​டிய​தில் முதி​யவர் ஒருவர் உயிரிழந்​தார்.

Read Entire Article