கடத்தூர், அக்.10: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில், திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சியில், பத்திரெட்டி அள்ளி முதல் ரேகடஅள்ளி வரை ₹6.80 லட்சத்தில் புதிய தார் சாலை, பத்திரெட்டிஅள்ளியில் ₹8.40 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில் எம்எல்ஏ கோவிந்தசாமி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் சக்திவேல், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, துணை தலைவர், வார்டு உறுப்பினர், ஊர்தலைவர் பழனிசாமி, மகேந்திரன் வேலு, முருகன், வெங்கடாசலம், மாரி, இளங்கோவன், பிரதாப், சகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ₹15.20 லட்சத்தில் திட்டப் பணிகள் appeared first on Dinakaran.