14வது மாடியில் இருந்து கிழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்

3 months ago 12

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகர் செக்டார் 74 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் இன்று வந்த 21 வயது இளைஞன் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடிக்கு சென்ற அந்த இளைஞர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த குடியிருப்பில் வசித்து வரும் இருவர் துரிதமாக செயல்பட்டு தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞரை காப்பாற்றினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காப்பாற்றும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Entire Article