143வது பிறந்தநாளையொட்டி எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு திருக்குறள் கூட்டமைப்பினர் மரியாதை

1 month ago 5

நெல்லை, டிச. 13: பாரதியாரின் 143வது பிறந்தநாளையொட்டி எட்டயபுரம் நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு உலக திருக்குறள் கூட்டமைப்பினர் அதன் துணைத்தலைவரும், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் தலைவருமான கருத்தப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பிரபு கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் செல்வம் என்ற செல்லதுரை, துறை இயக்குநர் பூல்பாண்டி, கரண ஆசான் கவிஞர் சிவானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post 143வது பிறந்தநாளையொட்டி எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு திருக்குறள் கூட்டமைப்பினர் மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article