14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்: போக்சோவில் கைது

1 week ago 4

திருமலை: ஐதராபாத்தில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் ஒரு பெண், தனது கணவர் மற்றும் மகனுடன் அங்குள்ள குடியிருப்பில் கீழ் தளத்தில் வசித்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் அவர்களது 14 வயது மகன் வீட்டில் இருந்து வந்தான்.

இதற்கிடையில், அவர்களது குடியிருப்புக்கு அடுத்த அறையில் மற்றொரு பணிப்பெண்ணான 28 வயது இளம்பெண் வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுவன் வீட்டில் தனியாக இருந்தபோது, பக்கத்து அறையில் வசிக்கும் இளம்பெண் அவரது வீட்டிற்கு சென்று காதலிப்பதாகச் கூறி சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார், ஜூபிலி ஹில்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அந்த இளம்பெண் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்: போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article