14 பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சிமன்றப்பேரவை உறுப்பினர்கள் நியமனம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

1 month ago 6

சென்னை: சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு, பேரவையில் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆட்சி மன்றப் பேரவை, ஆட்சிக் குழு, மேலாண்மைக்குழு மற்றும் கல்விக் குழு ஆகியவற்றில் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களாக பணியாற்ற சட்டப் பேரவை உறுப்பினர்களிடம் இருந்து முறையாக வேட்பு மனுக்கள் வரப்பெற்றன.

அதில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றப் பேரவைக்கு டாக்டர் வை.முத்துராஜா, பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன், ஆர்.கணேஷ், பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு ரா.இளங்கோ, ப.அப்துல்சமது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், செ.ஊர்வசி அமிர்தராஜ், வி.வி.ராஜன்செல்லப்பா,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் தி.சதன் திருமலைக்குமார், ரூபி ஆர்.மனோகரன், பெரியார் பல்கலைக்கழகத்துக்கு பெ.ராமலிங்கம், ட்டி.ராமச்சந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு டி.கேஜி.நீலமேகம், ம.பிரபாகரன், சென்னை பல்கலைக்கழகத்துக்கு அ.வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், க.கணபதி, ஐட்ரீம் இரா.மூர்த்தி, கோ.செந்தில் குமார், கு.மரகதம் குமரவேல் வேட்பு மனு செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக் குழுவுக்கு இ.பரந்தாமன், ம.சிந்தனைச்செல்வன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு சி.வி.எம்.பி.எழிலரசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மேலாண்மை குழுமத்துக்கு தி.வேல்முருகன், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு வி.பி.நாகை மாலி, தமிழ்நாடு கால்நடை மருத்துவம் அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் இரா.லட்சுமணன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக் குழுவுக்கு ஏ.பி.நந்தகுமார், ஏ.நல்லதம்பி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த பல்கலைக் கழகங்களில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும், முறையாக வரப்பெற்றுள்ள வேட்புமனுக்களின் எண்ணிக்கையும் சமமாக இருப்பதால் வேட்பு மனுக்கள் அளித்த உறுப்பினர்கள் அனைவரும் அந்த பதவிகளுக்கு முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கிறேன்.

உறுப்பினர்களின் பதவிக்காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளாக இருப்பினும், அவர்கள் 16வது ஆட்சி மன்றப் பேரவைக் காலம் முடியும் வரை அப்பதவிகளில் பணியாற்றுவர். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஏதாவது ஒரு காரணத்துக்காக பேரவை உறுப்பினர் பதவி இழக்க நேரிட்டால் அந்த நாளோடு பல்கலைக் கழகத்தின் அமைப்பில் அவர் வகித்து வரும் உறுப்பினர் பதவியும் முடிவடையும்.

The post 14 பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சிமன்றப்பேரவை உறுப்பினர்கள் நியமனம்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article