14 நாட்களில் ரூ.1508 கோடி - வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'..!

4 weeks ago 8

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் இப்படம் 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூலை கடந்தது. இந்திய அளவில் அதிவேகமாக இந்த சாதனையை எட்டியுள்ள படம் என்ற பெருமையும் புஷ்பா 2 படத்திற்கு கிடைத்துள்ளது. 11 நாட்களில் இப்படம் ரூ.1409 கோடி வசூல் செய்துள்ளதை படக்குழு அறிவித்தது.

 

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடி வசூல் செய்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

The HISTORIC RULE at the box office continues #Pushpa2TheRule becomes the FASTEST INDIAN FILM to Gross 1500+ CRORES WORLDWIDE in 14 Days ❤1508CR & counting #Pushpa2HitsFastest1500crBook your tickets now!️ https://t.co/tHogUVEOs1#Pushpa2#WildFirePushpaIcon… pic.twitter.com/AQueWAv9Gp

— Mythri Movie Makers (@MythriOfficial) December 19, 2024
Read Entire Article