14 ஏ.சி.கள், 5 எல்இடி டிவிகள் உள்ளிட்ட வசதிகளுடன் டெல்லி பாஜ முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க ரூ.60 லட்சம் டெண்டர்: ஆம் ஆத்மி, காங்கிரஸ் கடும் தாக்கு

6 hours ago 2


புதுடெல்லி: 14 ஏ.சி.கள், 5 எல்இடி டிவிகள் உள்ளிட்ட வசதிகளுடன் டெல்லி பாஜ முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க ரூ.60 லட்சம் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. டெல்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. தற்போது இவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை ரூ.60 லட்சம் செலவில் புதுப்பிக்க பொதுப்பணி துறை டெண்டர் வெளியிட்டுள்ளது. இந்த இல்லம் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ராஜ் நிவாஸ் மார்க்கில் அமைந்துள்ளது. டெண்டரின்படி, இந்த இல்லத்தில் 14 ஏர் கண்டிஷனர்கள், 5 4கே அல்ட்ரா ஹெச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி செட்கள் (நான்கு 55 இன்ச் மற்றும் ஒரு 65 இன்ச்), 10 விளக்குகள், சரவிளக்குகள், சுவர் விளக்குகள் மற்றும் ஒரு மின்சார புகைபோக்கி ஆகியவை பொருத்தப்படும்.

மேலும், 14 சிசிடிவி கேமராக்கள், ஒரு தடையில்லா மின்சாரம் (யுபிஎஸ்) அமைப்பு, 23 ரிமோட் கண்ட்ரோல் சீலிங் ஃபேன்கள், 16 சுவர் ஃபேன்கள் மற்றும் 6 கீசர்கள் இடம்பெறும். ஒரு வாஷிங் மெஷின், பாத்திரம் கழுவும் இயந்திரம் மற்றும் ஒரு பெரிய ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்பு ஆகியவையும் புதுப்பித்தலின் ஒரு பகுதியாகும். மொத்தம் 115 விளக்கு சாதனங்கள், சுவர் விளக்குகள், தொங்கும் விளக்குகள் மற்றும் 3 பெரிய சரவிளக்குகள் பொருத்தப்படும். சமையலறையில் ஒரு மின்சார புகைபோக்கி, மின்காந்த பர்னர்கள் கொண்ட கேஸ் அடுப்பு, 20 லிட்டர் மைக்ரோவேவ் மற்றும் ஒரு தண்ணீர் சுத்திகரிப்பான் இடம்பெறும். முதல்வரின் குடும்பம் வசிக்க இந்த விரிவான புதுப்பித்தல்கள் மற்றும் மேம்பாடுகள் தேவை என்று ஒரு பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதற்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அவரது இல்லம் ‘ஷீஷ்மஹால்’ என்று பாஜவால் விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது ரேகா குப்தாவின் இல்லம் ‘மாயாமஹால்’ ஆக மாறுகிறது என்று ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. மேலும், மற்றவர்கள் ‘ஷீஷ்மஹால்’ கட்டியதாக குற்றம் சாட்டிவிட்டு, தாங்கள் ‘ரங்மஹால்’ கட்டுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

The post 14 ஏ.சி.கள், 5 எல்இடி டிவிகள் உள்ளிட்ட வசதிகளுடன் டெல்லி பாஜ முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க ரூ.60 லட்சம் டெண்டர்: ஆம் ஆத்மி, காங்கிரஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article