14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் மெஸ்ஸி

2 months ago 11

திருவனந்தபுரம்: அந்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். கேரள, கொச்சியில் அடுத்த ஆண்டு நட்புரீதியில் நடைபெறும் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்பந்து உலகக்கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வருகை தர உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த கனவு மாநில அரசின் முயற்சிகள் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து வாரிய ஆதரவின் காரணமாக நனவாகி வருகிறது. கரளா வரலாறு படைக்க உள்ளது; சாம்பியன்களை வரவேற்று, கால்பந்தின் மீதான அன்பைக் கொண்டாடவும் தயாராகுவோம் எனவும் கூறினார்.

The post 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் மெஸ்ஸி appeared first on Dinakaran.

Read Entire Article