‘13 ஆண்டுகளில் சொத்துக்களை தான் இழந்துள்ளோம்’நாதகவில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு: புதிய இயக்கம் துவக்கம்

1 month ago 2


திருச்சி: நாதகவில் இருந்து விலகியவர்கள் புதிய இயக்கம் தொடங்கியுள்ளனர். அவர்கள்‘13 ஆண்டுகளில் சொத்துக்களை தான் இழந்துள்ளோம்’ என்று சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள், தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை துவக்கி உள்ளனர். இந்த இயக்கத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் வெற்றி குமரன், தனசேகரன், புகழேந்தி, வழக்கறிஞர் பிரபு, தியாகராஜன் ஆகியோர் கூட்டாக திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: நாதக மாவட்ட செயலாளர்களாக பயணித்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டவர்கள், சீமான் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் வெளியேறி தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கமாக உருவெடுத்துள்ளோம்.

நாதகவின் அனைத்து கொள்கைகளும், சித்தாந்தங்களும் எங்களுடையது தான். அதனை நாங்கள் ஏற்கிறோம். சீமானை நாங்கள் ஏற்கவில்லை. அவரிடம் ஒருகாலத்தில் இருந்த ஜனநாயகம் இன்று ஒரு துளிக்கூட இல்லை. சமீபகாலமாக சசிகலா, ரஜினியை சந்திப்பது போன்றவை எல்லாம் நாடகத்தில் நடிப்பது போன்று உள்ளது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள், செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இன்று வரை கட்சியில் வசூலிக்கப்படும் திரள்நிதி எவ்வளவு வருகிறது, அதில் என்ன செலவு செய்கிறார்கள் என்ற எந்த கணக்கு வழக்கும் இல்லை. பொறுப்பில் இருப்பவர்கள் டம்மி, முடிவுகளை சீமான் மட்டுமே எடுப்பார்.

கல்யாண வீட்டில் அவர் தான் மாப்பிள்ளை, இறந்தவர்கள் வீட்டில் அவர் தான் பிணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். கடந்த 13 ஆண்டுகளில் எங்களுடைய சொத்துக்களைத்தான் இழந்துள்ளோம். மனைவியின் தாலிச்செயினை அடமானம் வைத்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ‘13 ஆண்டுகளில் சொத்துக்களை தான் இழந்துள்ளோம்’நாதகவில் இருந்து விலகியவர்கள் சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு: புதிய இயக்கம் துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article