
காத்மண்டு,
எவரெஸ்ட் சிகரத்தின் நுழைவு பகுதியான லுக்லாவில் இருந்து, காத்மண்டு நகரின் தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ரேம்சாப் பகுதியை நோக்கி சீதா என்ற தனியார் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானத்தில் 12 இந்தியர்கள் பயணித்து உள்ளனர்.
இந்நிலையில், அந்த விமானம் செல்லும் வழியில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக நேபாளத்தின் காத்மண்டு நகரில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டது. அந்த டார்னியர் விமானத்தில் 12 இந்தியர்கள் மற்றும் 2 நேபாள நாட்டினர் மற்றும் 3 விமான ஊழியர்கள் இருந்துள்ளனர்.
விமான நிலையத்தில் விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர், டிராக்டர் உதவியுடன் விமானம் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.