11வது நாளாக அத்துமீறிய பாக்.எல்லையில் 8 ராணுவ நிலைகள் மீது தாக்குதல்

1 week ago 5

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்படட சம்பவத்துக்கு பின் இந்தியா -பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தி வருகின்றது. நேற்று மு்னதினமும் தொடர்ந்து 11வது நாளாக எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தானால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தர், நவ்ஷாரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர். ஜம்மு, ரஜோரி, பூஞ்ச் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாரமுல்லா, குப்வாரா மாவட்டங்களில் இரவு முழுவதும் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

 

The post 11வது நாளாக அத்துமீறிய பாக்.எல்லையில் 8 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article