100-வது நாளை நிறைவு செய்த விஜய்யின் 'தி கோட்'...வீடியோ வெளியிட்ட படக்குழு

4 weeks ago 5

சென்னை,

'லியோ' படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் 'தி கோட்'. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தி கோட் படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வெளியானது.

இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.126 கோடி வசூலித்தது. இந்த நிலையில் 'தி கோட்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 455 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2024-ம் ஆண்டின் நம்பர் 1 பாக்ஸ் ஆபீஸ் வெற்றி திரைப்படமாக 100-வது நாளை நேற்றுடன் நிறைவு செய்துள்ளது.

இத்திரைப்படத்தின் 100-வது நாளை கொண்டாடும் விதமாக சென்னை மதுரவாயலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் ரசிகர்களின் உற்சாக பங்கேற்புடன் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதனை சிறப்பிக்கும் வகையில் 'தி கோட்' படத்தின் படக்குழு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

Celebrating 100 glorious Days of 'The Greatest Of All Time'One phenomenon. Infinite cheers #ThalapathyVijay defines the #GOAT legacy ❤️@actorvijay SirA @vp_offl HeroA @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghorampic.twitter.com/FCRkOeEjGv

— AGS Entertainment (@Ags_production) December 13, 2024
Read Entire Article