சென்னை: 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கூடுதல் நிதி பெற்றுள்ளது என்ற அண்ணாமலைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி கொடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு ஊதியம் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசால் அறிவிக்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டு தோறும் மனித சக்தி நாட்களை கணக்கிட்டுதான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்குகிறது. 100 நாள் வேலை திட்ட சட்டப்படி மாநில மக்கள் தொகை, ஊராட்சி எண்ணிக்கை என்ற எந்த வேறுபாடும் குறிப்பிடவில்லை. ஊரக பகுதிகளில் வேலைகோரும் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்று மட்டுமே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
The post 100 நாள் வேலை திட்டம்: அண்ணாமலைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!! appeared first on Dinakaran.