100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் அலைக்கழிப்பு நிதியை குறைத்து திட்டத்தை முடக்க ஒன்றிய பாஜ அரசு முயற்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

2 hours ago 1

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய பாஜ அரசு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை ரூ.1635 கோடி ஊதிய நிலுவைத் தொகை பாக்கி இருக்கிறது. இது கடந்த நவம்பர் 27, 2024 முதல் ஊதியம் தரப்படாததால் 1 கோடியே 9 லட்சம் தொழிலாளர்கள் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போதுமான நிதியை ஒதுக்குவதற்கு பதிலாக ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து ஆதார் அட்டை கட்டாயம் என்கிற தேவையற்ற நிபந்தனைகளை விதித்து தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து அதன்மூலமாக கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

100 நாள் வேலை திட்டத்தின்படி வேலை கேட்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும். அப்படி வேலை வழங்கவில்லை என்றால் அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென்று சட்டம் கூறுகிறது. ஆனால், ஒன்றிய அரசு ஒதுக்குகிற நிதி சராசரியாக ஆண்டுக்கு 42 நாட்களுக்கு தான் வேலை வழங்க முடியும். மீதியுள்ள நாட்களுக்கு வேலை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் வாழ்கிற கிராமப்புற மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதியை குறைத்து தேவையற்ற நிபந்னைகளை விதித்து அத்திட்டத்தை முடக்குகிற ஒன்றிய பாஜ அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் அலைக்கழிப்பு நிதியை குறைத்து திட்டத்தை முடக்க ஒன்றிய பாஜ அரசு முயற்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article