‘100 நாள் வேலை திட்டத்தால் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு’ - மத்திய அரசு உயர் அதிகாரி

7 months ago 34

வேலூர்: இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் வறுமைக்கோட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தால் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் துசார் காந்தி பெஹரா கூறினார்.

வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலையில் 19-வது பட்டமளிப்பு விழா இன்று (அக்.13) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். முன்னதாக, பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

Read Entire Article