100 அடியில் கொடிக் கம்பம், 600 எல்இடி திரைகள், செல்போன் டவர்... - விஜய்யின் தவெக மாநாடு ஏற்பாடுகள் எப்படி?

3 months ago 16

விழுப்புரம்: விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய், 100 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைக்கவுள்ளார். அதற்காக வெள்ளிக்கிழமை பகல் 12:30 மணி அளவில் மாநாட்டு முகப்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான இடம் 225 சதுர அடியை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து, அதில் 100 அடி உயர கொடிக் கம்பம் நடப்பட்டது.

தவெக மாநாட்டு மேடையில் இருந்து நடுவே அமைக்கப்பட்டுள்ள ரேம்பில் நடந்து வந்து கட்சிக் கொடியை நடிகர் விஜய் ரிமோட் மூலம் ஏற்றி வைக்கவுள்ளார். மாநாட்டின் மேடை அருகே இணையதள வசதிக்காக தனியார் கம்பெனியின் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு ஏற்பாட்டின் இறுதிக்கட்ட பணிகளாக மாற்றுத் திறனாளிகள் அமர தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டு நிகழ்வுகளை பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் 600 பெரிய எல்இடி திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன.

Read Entire Article