திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இருசக்கர வாகன ஆம்புலன்ஸை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஓட்டி துவக்கி வைத்தனர்.
ஒரு கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில் 25 வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு 10 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத இடத்திற்கு பைக் ஆம்புலன்ஸ் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.