
சென்னை,
எழில் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் தேசிங்குராஜா. படம் திரைக்கு வந்து வெற்றி பெற்ற நிலையில் படத்தின் 2-ம் பாகம் தேசிங்குராஜா-2 என்ற பெயரில் உருவாகி உள்ளது. படத்தில் கதாநாயகனாக விமல், குக்வித்கோமாளி புகழ், ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் அன்பழகன், சாம்ஸ், சிங்கம் புலி, ரோபோ சங்கர், திருச்சி சாதனா, ரவிமரியா, ஹர்ஷிதா உள்பட பலர் நடித்து உள்ளனர்.
இப்படம் வருகிற 11-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டார்'
அப்போது அவர் பேசுகையில், 10 மனைவி கூட கட்டிக் கொள்ளலாம். ஆனால் காமெடி படம் எடுப்பது ரொம்ப கஷ்டம். என் படத்தில் காமெடி காட்சிகளே இருக்காது. எனக்கு காமெடி படம் பிடிக்கும். இளையராஜாவிற்கு பிறகு இசையை அதிகம் நேசிப்பது வித்யா சாகர்தான். இந்த படத்தில் எழில் 10 இயக்குனர்களை நடிக்க வைத்துள்ளார். அடுத்த படத்தில் 10 தயாரிப்பாளர்களை எழில் நடிக்க வைக்க வேண்டும். எழில் படத்தின் காமெடியை 100 தடவை பார்த்திருப்பேன். மக்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை கொடுப்பார் எழில். இவ்வாறு அவர் பேசினார்.