10 கோவில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்: அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

1 day ago 3

சென்னை,

10 திருக்கோவில்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டசபையில் இதுகுறித்து அவர் பேசுகையில்,

"சுவாமிதரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும். இத்திட்டத்தில்10 திருக்கோயில்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவினத்தில் செயல்படுத்தப்படும்.

1. திருச்செந்தூர் : அருள்மிகுசுப்பிரமணியசுவாமிதிருக்கோயில்

2. திருவரங்கம் : அருள்மிகுஅரங்கநாதசுவாமிதிருக்கோயில்

3. சமயபுரம் : அருள்மிகுமாரியம்மன்திருக்கோயில்

4. திருவண்ணாமலை : அருள்மிகுஅருணாச்சலேசுவரர்திருக்கோயில்

5. திருத்தணி : அருள்மிகுசுப்பிரமணியசுவாமிதிருக்கோயில்

6. ஆனைமலை : அருள்மிகுமாசாணியம்மன்திருக்கோயில்

7. பண்ணாரி : அருள்மிகுமாரியம்மன்திருக்கோயில்

8. திருப்பரங்குன்றம் : அருள்மிகுசுப்பிரமணியசுவாமிதிருக்கோயில்

9. மருதமலை : அருள்மிகுசுப்பிரமணியசுவாமிதிருக்கோயில்

10. பெரியபாளையம் : அருள்மிகுபவானியம்மன்திருக்கோயில்."

என்றார்.

 

Read Entire Article